தசரா நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய சில விரத விதிமுறைகள்
இதோ நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா மாபெரும் திருவிழா விரைவில் வருகிறது
நீ பசி பட்டினியாக 121, 101, 91, 48, 41, 31, 21, 11, 8 இத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று முத்தாரம்மன் ஒருபோதும் சொல்லவில்லை
ஆனால் வேடம் அணிபவர்கள், விரத சமயத்தில் இவ்வாறாக தான் இருக்க வேண்டும் என்று முத்தாரம்மன் சொல்கிறாள்
1. தசரா திருவிழாவுக்கு விரதம் இருக்கும் நீ நீயாக மட்டுமே இருக்க வேண்டும். உன்னிடம் ஜாதி அடையாளம் சுத்தமாக இருக்க கூடாது மற்றும் நாம் அனைவரும் முத்தாரம்மனின் பிள்ளைகள் என்ற ஒற்றை நினைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும்.
2. காம உணர்வு ஒருபோதும் உன் மனதில் தோன்றக்கூடாது.
3. அன்னையின் துதி எப்போதும் உன் மனதிலும் உன் உதடிலும் இருக்க வேண்டும்.
4. உன் பிள்ளைகளையோ அல்லது பிற உயிருள்ள ஜீவன்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது மற்றும் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்த கூடாது.
5. உன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும், உற்றார் உறவினரிடமும், மற்றவருடனும் ஒருபோதும் வாக்கு வாதம், சண்டையிடுதல், வீண் விவாதம் செய்ய கூடாது.
6. உன்னைப் பற்றியோ அல்லது உனக்கு தெரிந்தவர்களைப் பற்றியோ யாராவது தவறாக பேசும் போதும், அந்த சமயத்தில் கோபம் கொள்ளாமல் பொறுமை காக்க வேண்டும். ஒருபோதும் கோபம் கொள்ள கூடாது.
7. நான் காளி வேசம் அணிவதால் நான் தான் பெரியவன், மற்றவர்கள் என்னைவிட சிறியவர்கள் என்ற ஆணவம் ஒருபோதும் உன் மனதில் தோன்ற கூடாது.
8. ஒருபோதும் பொய் கூற கூடாது.
9. அசைவ உணவைத் தவிர்த்து, உடலையும் மனதையும் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
10. மது அருந்துதல், புகைப்பிடித்தல் கூடாது.
11. உன் மேல் அன்னை வந்து அருள் கொண்டு ஆடி நிற்கும் சமயத்திலும், அன்னையின் உத்தரவின்றி குறி சொல்ல கூடாது.
12. நீ வேடம் அணிவதாக வேண்டிய வேண்டுதலை உன் முழு மன நிறைவுடன் செய்.
13. உன்னோட விரோதியாக இருந்தாலும் கூட, அனைவரிடமும் அன்பாக இரு.
14. நீ அன்னைக்கு செய்யும் பணிவிடைகளை முழு மனதுடன் செய்.
15. உன்னைவிட வயது சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் மரியாதையாக பேசு.
16. அன்னை என்மீது இருக்கிறாள் என்று, செய்வினை செய்தல் போன்ற தீய செயல்களை எந்த சமயத்திலும் செய்ய கூடாது.
17. மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்.
நான் கூறிய கருத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும் மற்றும் சந்தேகம் இருந்தால் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.
இன்னும் பல விதிமுறைகள் தொடர்ந்து சேர்க்கப்படும்.
இவண்:
சுந்தர் ராஜன்
சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழு, சங்கனாபுரம்
செல்: 9942297689
வாட்ஸ்அப் குழு: https://chat.whatsapp.com/JIMDwuUayER3bk6uHI2TFv
யூடியுப் சேனல்: https://www.youtube.com/c/samethasrimutharamman
ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/gnanamurtheeswararsamethasrimutharamman/
Comments
Post a Comment